பாடசாலையில் குளவி கொட்டியதில் 42 பேர் பாதிப்பு | தினகரன்


பாடசாலையில் குளவி கொட்டியதில் 42 பேர் பாதிப்பு

நுவரெலியாவிலுள்ள பாடசாலையொன்றில் குளவிக் கொட்டிற்கு இலக்காகி 42 பேர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குளவிக் கொட்டிற்கு உள்ளானவர்களில் மாணவர்கள் உள்ளிட்ட 03 ஆசிரியர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை முடிவடைந்த நிலையில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் பந்து ஒன்று குளவிக் கூட்டில் பட்டுள்ளதை அடுத்து, அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து மாணவர்களைக் கொட்டியுள்ளது.

குளவிக் கொட்டிற்கு உள்ளான மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாடசாலை கட்டடத்தில் காணப்படும் குளவிக் கூட்டை அகற்றுவது தொடர்பில் நுவரெலிய வனஜீவராசி அதிகாரிகளுக்கு நுவரெலிய பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். 


Add new comment

Or log in with...