கொழும்பு, கண்டி வளிமண்டலத்தில் மாற்றம் | தினகரன்


கொழும்பு, கண்டி வளிமண்டலத்தில் மாற்றம்

கண்டி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வளிமண்டலத்தில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் (Micro Plastic) அதிகரித்துக் காணப்படும் அபாயம் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பட்டப் பின்படிப்பு கல்வி நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் எச்.எம்.டீ.ஜீ.ஏ. பிட்டவல இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில் கடந்த இரண்டு வார காலப்பகுதியில் இரவு வேளையில் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்துக் காணப்பட்ட தூசி துகள்கள் குறைவடைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

பிற்பகலில் பெய்துவரும் மழை காரணமாக, வளிமண்டலத்தில் காணப்பட்ட தூசி துகளின் அளவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக, அந்நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.   

தற்போது அதன் அளவு 40 -60 ஆக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.  

கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு 100 -150 இற்கு இடையில் அதிகரித்துக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...