ஷானி அபேசேகரவிற்கு வெளிநாடு செல்லத் தடை | தினகரன்

ஷானி அபேசேகரவிற்கு வெளிநாடு செல்லத் தடை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிற்கு நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (07) அமுலுக்கு வரும் வகையில்ஷானி அபேசேகர பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

அவரால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் மூலம் இலங்கை பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் குரல் பதிவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...