ஒரு வருடத்திற்குள் தேர்தல் முறையை மாற்ற ஜனாதிபதிக்கு .ல.சு.க அழுத்தம் கொடுக்கும்

ஒரு வருட காலத்தினுள் தேர்தல் முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு சு.க அழுத்தம் கொடுக்குமென அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார். இனவாதக் குழுக்களின் அழுத்தம் காரணமாகவே தேர்தல்முறைமாற்ற முன்னெடுப்புகள் தடைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உ​யைாற்றிய அவர் மேலும் கூறியதாவது, நாட்டுக்கு உகந்த தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும்.விருப்புவாக்கு முறையை மாற்றி கலப்பு முறையொன்றை கொண்டு வர வேண்டும் என சு.க ஆரம்ப முதல் கோரி வருகிறது. 20 ஆவது திருத்தத்தை கொண்டுவரும் உறுதி காரணமாகவே நாம் 19 ஆவது திருத்தத்தை ஆதரித்தோம்.தேர்தல் முறையை மாற்றுவது குறித்து நீண்டகாலம் ஆராயப்பட்டது.ஆனால் இனவாத அழுத்தம் காரணமாக இது தடைப்பட்டது. தேர்தல் முறை திருத்தத்திற்கு நாம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்போம்.பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தலுக்கு கலப்பு முறையொன்றை கொண்டுவர துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தடைப்பட்ட மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். இதற்காக பல சட்ட திருத்தங்களை தயாரித்துள்ளோம்.பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் மகாகாண சபைத் தேர்தலை நடத்தும் வகையில் திருத்தங்கள் முன்னெடுக்கப் படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை மாற்றம் காத்திரமான முன்னெடுப்பு என்றாலும் இதனூடாக குழுப்ப நிலை ஏற்பட்டது.இது தொடர்பிலும் சட்ட திருத்தம் அவசியம்.ஒருவருட காலத்தினுள் இது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் 24 அங்குல நீள வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டது. சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க வேண்டும். கட்சிகள் பெறும் வாக்கு வீதத்திற்கு அமையவே அடுத்த தேர்தலில் இடமளிக்க வேண்டும்.ஒரு வீதமாவது வாக்குப் பெற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...