மக்களை அசௌகரியப்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்காது

அரசாங்கம் ஒருபோதும் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் விதத்தில் செயற்படமாட்டாதென மின்சாரம் எரிசக்தி மற்றும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.  

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு ஹம்பலாந்தோட்டை நோனகம கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறுதெரிவித்தார்.  

மின்சாரம், எரிசக்தி மற்றும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு தொடர்ந்தும் உரையாற்றியதாவது :நாம் அனைவரும் எங்களை அர்ப்பணித்து எமது நாட்டிலுள்ள குழந்தைகளு க்கு சிறந்ததொரு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கு வோம்.இதனூடாக பலமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சிறார்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக் கவுள்ளோம்.எமது அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி என்பவை நாட்டின் தேசிய வருமானத்தை விடவும் அதிகமாகும்.இப்பாரிய சவாலுக்கு மத்தியிலும் மக்களுக்காக வழங்கப்படும் சலுகைகள்,வரப்பிரசாதங்களை எவ்விதக் குறைவுமின்றி வழங்குவோம்.  

நான் 26 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறேன். இக்காலப் பகுதியில் பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுள்ளேன். இருந்தாலும் அரசாங்கம் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் எவ்வித வரப்பிரசாதங்கள்,சலுகைகளை நான் பெற்றதில்லை. எண்ணெய் நிரப்பு நிலையங்கள், மண் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரம், பஸ் வண்டி அனுமதிப்பத்திரங்கள்,மதுபானசாலை அனுமதி எதனையும் நான் பெறவும் இல்லை.அதுமாத்திரமன்றி இவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு எவரிடமிருந்தும் எவ்விதக் கொடுப்பனவுகளைப் பெற்றதுமில்லை. இதனால் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் கொளரவத்தை பாதுகாத்துள்ளேன் என தலைநிமிர்ந்து என்னால் கூற முடியும். நாடு ஆரம்பத்தில் இருந்தது போன்ற நல்லதோர் நிலையை கட்டியெழுப்புவதற்காக  ஜனாபதி, பிரதமர் ஆகியோர் முன்னெடுக்கும் சகல திட்டங்களுக்கும் நாம் அனைவரும் ஒத்துழைப்பது அவசியம். இலஞ்ச ஊழல்களற்ற நாட்டை கட்டியெழுப்பு வதே, ஜனாதிபதியின் இலக்கென்றும் அவர் தெரிவித்தார்.  

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...