தகவல் தொழில்நுட்பத்தில் ISO 27001:2013 சான்றிதழைப் பெற்றஆர்பிகோ ஃபினான்ஸ்

வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தொகுதியுடன், துறையில் உயர்ந்த ஸ்தானத்தை எய்துவதற்கான தூர நோக்குடைய திட்டங்களுடன் செயலாற்றும் இலங்கையின் இரண்டாவது பழமையான நிதிச் சேவைகளை வழங்கும் ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சி (AFCP) தனது டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் காண்பிக்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்காக ISO 27001:2013சான்றிதழை பெற்றுக் கொண்டது. ஆறு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், அசோசியேட் மோட்டர் ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சியின (AMF) உரிமையாண்மையின் கீழ் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. 

தலைமைத்துவத்தின் உறுதியான வழிகாட்டலில் இயங்கும் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, செயன்முறைகளை சீராக்கல் மற்றும் தீர்வுகளை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற சேவைகளுக்காக டிஜிட்டல் மயமாக்கமடைந்த வண்ணமுள்ளது. இந்நிலையில், AFCP தனது தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் சாதனங்கள் மற்றும் பாரிய தரவுகள் இணைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில், தரவு பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவற்றை வலிமைப்படுத்துவதில் காண்பிக்கும் ஈடுபாட்டை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த சான்றிதழை அமைந்துள்ளது.  

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த காலப்பகுதியில் வங்கியியல் மற்றும் நிதியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சைபர் தாக்கங்கள் மற்றும் டேட்டா விதிமீறல்கள் போன்றன பாரிய சவால்களாக அமைந்துள்ளன. AFCP இன் தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சான்றிதழினுௗடாக, அதன் வாடிக்கையாளர்களுக்கும் பங்காளர்களுக்கும் வழங்கும் தகவல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பிரத்தியேக பாதுகாப்பு போன்றன மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆர்பிகோ ஃபினான்ஸ் கம்பனி பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷனில் தயாவன்ச கருத்துத் தெரிவிக்கையில், இந்த தரச் சான்றிதழை நாம் பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நாம் சேவைகளை வழங்கி வரும் பெருமளவான வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை எமது செயற்பாடுகளின் சகல பிரிவுகளிலும் உறுதி செய்வதற்கு நாம் அதிகளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். என்றார்.  


Add new comment

Or log in with...