குடியுரிமை சட்டம் பற்றி விவாதிக்க தயாரா?

ராகுலுக்கு அமித்ஷா சவால்

 குடியுரிமை சட்டம் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது, இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் தயாரா என ராஜஸ்தானில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

ஜோத்பூரில் அவர் மேலும் பேசியதாவது: கடந்த ஓராண்டில் பிரதமர் மோடி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குடியுரிமை சட்டம் தொடர்பாக மக்களுக்கு தவறான வழியை எதிர்கட்சியினர் காட்டுகின்றனர். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம். காஷ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டதை ராகுல் கேள்வி எழுப்புகிறார்.

இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை ராகுல் எழுப்புகிறார், தேச விரோத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மை மக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அண்டைய நாடுகளில் சிறுபான்மை மக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது இந்திய முஸ்லிம்களின் குடியுரிமைக்கு பங்கம் வரும் என எதிர்க்கட்சியினர், மக்கள் மற்றும் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்கள், ஆனால் இந்த சட்டம் குடியுரிமையை வழங்குவதே தவிர, குடியுரிமையை பறிப்பதில்லை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

குடியுரிமை மசோதா குறித்து நேருக்குநேர் விவாதிக்க ராகுல் தயாரா? காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்., நாட்டு மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. இந்த கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Add new comment

Or log in with...