இஸ்லாமிய பெண்மணிகளின் ஆடைகள் ...

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் போது பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்;  இறைவா!   நீ எந்த நன்மையை நோக்கமாகக் கொண்டு இவ்வாடையை எனக்கு அருளினாயோ அதே தூய நோக்கங்களுக்காக இதனைப் பயன்படுத்த எனக்கு கிருபை செய்தருள்வாயாக. என்னுடைய மானத்தை மறைத்து எனது உடலையும் ஆத்மாவையும் மானக் கேட்டிலிருந்தும் வெட்கக் கேட்டிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளக் கிருபை செய்தருள்வாயாக. இவ் ஆடையை என்னுடைய உடலை கவர்ச்சியாகவும் அலங்காரமாகவும் வைத்துக்கொள்ளும் சாதனமாகக் கொள்ள கிருபைசெய்தருள்வாயாக.  இறைவா! ஆடையில் போலி கௌரவம்,பெருமை,கர்வம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதில் இருந்தும் என்னைத் தடுத்து உனது அடிமைகளான ஆண்,பெண் இருபாலாருக்கும் ஆடை அணிவதில் நீ விதித்துள்ள வரையறைகளை மீறாதவாறு எனக்கு கிருபை செய்தருள்வாயாக என்று பிரார்த்திப்பார்கள்.

ஆடைகளை நீங்கள் அணியும் போது வலதுபக்கத்தை முற்படுத்துங்கள். அதாவது உங்கள் வலதுகால், வலது கை  இவைகள் முதலில் ஆடைகளுக்குள் உட்புகுத்தவும். இதுவே இறைத் தூதர் அவர்களின் நடைமுறையாக இருந்திருக்கிறது.

பட்டாடைகளை ஆண்கள் அணியக் கூடாது இது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமானவையாகும். இதனால்தான் இறைதூதர் அவர்கள் ஆண்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணிவதையும் பெண்களைப் போல் பாவனை செய்வதையும் கண்டிப்பாக தடைசெய்துள்ளார்கள்.

 பெண்கள் 

தனதுஉடற்கட்டைவெளிகாட்டி உணர்ச்சிகளை தூண்டக்கூடியஆடைகளை அணியக்கூடாது.  இவ்வாறு அணிந்தால் இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணக் கோலம் பூண்டவர்களாகின்றனர்.

இவர்களுக்கு நாளை மறுமையில் கொடூரமான தண்டனை இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஒருபெண் பருவமடைந்துவிட்டால் அவளுடைய முகத்தையும் கைகளையும் தவிர உடலின் வேறெந்த பகுதியையும் வெளிக்காட்டுதல் இஸ்லாமிய சட்டத்திற்கு விரோதமானது.

எப்பொழுதும் எளிய கௌரவமான பண்பட்ட ஆடைகளையே அணிவதோடு அவைகளுக்காக அளவாகவே செலவு செய்ய வேண்டும். ஆடை விஷயத்தில் வீண் விரயத்தையும்,ஆடம்பரச் செலவையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்;  ஆடம்பரத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள். சொகுசையும்,ஆடம்பரத்தையும் விரும்புகின்றவர்கள் அல்லாஹ்வுக்கு உகப்பானவர்களல்ல. ஆதாரம்:மிஷ்காத்

ஆடை விஷயத்தில் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிதல் வேண்டும். ஆடைகள் மூலம் அகங்காரத்தையோ, கம்பீரத்தையோ காண்பிக்கக்கூடாது. சங்கையும் கௌரவமும் பொருந்தியஆடைகளே சன்மார்க்க விசுவாசிகளுக்கு அல்லாஹ் விதித்துள்ள ஆடைகளாகும். 

எம்.சி. கலீல், 
கல்முனை

 


Add new comment

Or log in with...