ஆண்டின் SLIM Turnaround Brand of the Year தங்கவிருதை வென்ற DSI Tyres

டயர் உலகின் புரட்சிகர முன்னோடி DSI Tyres நிறுவனத்துக்கு SLIM Brand Excellence விருது விழாவில் Turnaround Brand of the Year 2019 தங்கவிருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் மிகவும் போட்டித் தன்மைமிக்கதும் முதல்தர வர்த்தகநாம விருது வழங்கும் விழாவாக கொண்டாடப்படும் SLIM Brand Excellence விழா 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெருமைமிகு வரலாற்றைக் கொண்டுள்ளது. கொழும்பு ஷெங்ரீலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற விருது விழாவில் வரையறுக்கப்பட்ட செம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் பணிப்பாளர் காவிந்த ராஜபக்ஷ இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.

DSI Tyres வர்த்தக நாமம் கடந்தகாலம் முழுவதுமாக வெளிப்படுத்திய திறமைகள் மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் உறவினூடாக பூரணமாக புதிய வடிவில் சந்தையில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டமை இவ்விருது கிடைப்பதற்கு பிரதான காரணமாகும். Any Bike One Tyre என்ற தொனிப்பொருள் மூலம் வழிநடத்தப்படும் DSI Tyres, Safe Ride, Long Ride மற்றும் Trendy Ride அனுபவங்களை வழங்குகின்றது.

DSI Tyres வாடிக்கையாளர் தேவைகளை காலமாற்றத்துக்கேற்ப இனங்கண்டு நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் ஊடாக சூழல் நேயமிக்கதாக தமது வர்த்தக நாமத்தை மேம்படுத்தி வருகிறது.


Add new comment

Or log in with...