வரி மீளாய்வுகள் இன்று முதல் அமுல்

வரி செலுத்த முடியாமல் பாரிய சுமைக்கு உள்ளானவர்களுக்கு இவ்வாண்டு நிவாரணம் அளிக்கும் வருடமாக அமையுமென அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

இன்று (01) முதல் பல வரிகள் நீக்கப்படும் அதேநேரம் மேலும் பல வரிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய அனைத்து வரிகளும் இன்று முதல் மீளாய்வுடன் நடைமுறைக்கு வருமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வரி செலுத்துவோருக்கு வரிச் சுமையை குறைக்கவும், வரி வேட்டைக்குட்படுத்தப்பட்ட அனைவருக்கும், வரிச் சலுகையுடனான புது வருடமாக இவ்வருடம் அமையும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, உழைக்கும்போது செலுத்தும் வரி, பற்றுவரி, பொருளாதார சேவை கட்டணம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான பற்று வரி, பங்குச் சந்தை இலாபங்களுக்கான மூலதன வரி, தேசத்தை கட்டியெழுப்பும் வரி, வட்டி மீதான பற்று வரி, கடன் சேவை வரி, மாடி வீடுகளுக்கு அறிவிடும் VAT வரி, மதஸ்தலங்கள் மீதான வரி, வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களின் வருமான வரி, பெருந்தோட்ட கைத்தொழில் மூலம் பெறப்படும் அனைத்து வருமானத்திற்குமான வரிகள் ஆகியன நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன், VAT வரி 15% இலிருந்து 8% ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு, கட்டுமான வருமான வரி 28% இலிருந்து 14% குறைக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பாடல் வரி 35% இலிருந்து 25% வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரம்

(லக்ஷ்மி பரசுராமன், RSM)


Add new comment

Or log in with...