அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கடந்த 1995/96 கல்வியாண்டில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களினால் புதிய கலாசாலை பெயர்ப்பலகை அன்பளிப்புச் செய்யப்பட்டது.
அதன் தலைவர் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எம்.தாஜூடீன் தலைமையிலான நிர்வாகிகள் புதிய பெயர்ப்பலகையை ஆசிரியர் கலாசாலை அதிபர் ஏ.முகம்மது பைசாலிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் 1995/96 கல்வியாண்டு பயிற்சி ஆசிரியர்களின் செயலாளர் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ்.எம்.மொஹிடீன் மற்றும் ஏனைய நிர்வாகிகளான ஆசிரியர்கள் என்.ரி.முபாறக், ஏ.எல்.ஹாமிம், எம்.எச்.எம்.கியாஸ், கலாசாலை விடுதி அத்தியட்சகர் எம்.ஐ.இபாஸ் நபுக்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கடந்த 1995/96 கல்வியாண்டில் இருவருட பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிழ்வைத் தொடர்ந்து கலாசாலையின் பெயர்ப்பலகை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை மத்திய நிருபர்
Add new comment