'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

பட்டமளிப்பு விழாவில் ICT நிபுணர்களுக்கு வெகுமதி

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei,  அதன் உலகளாவிய முதற்தர  பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டமான, ‘எதிர்காலத்துக்கான விதைகள்’  (Seeds for the Future) என்ற திட்டத்தின் கீழ், அண்மையில் இலங்கையின் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சிறந்த ICT (ICT) பிரிவின் இளங்கலை பட்டதாரிகளின் நான்காவது தொகுதிக்கு  நிதியுதவி அளித்து சீனாவில் உள்ள Huawei தலைமையகத்தில் கற்பதற்கும், தொழில் அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பளித்தது.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள Huawei CIS இல் இடம்பெற்றது.

Huawei நிறுவனத்தின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’ பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் பங்குபற்றிய இலங்கை மாணவர்களின் 2019 ஆண்டுக்கான தொகுதி சீனாவுக்குச் சென்று, அங்கு நவம்பர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரை 2 வாரங்களை கழித்தது.  5G, LTE மற்றும் cloud computingபோன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய தெளிவான புரிதலை மாணவர்கள் பெற்றனர், அதே நேரத்தில் Huawei நிறுவனத்தின் மிக மேம்பட்ட ஆய்வகங்கள் மூலம் இத்தகைய தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தைப் பெற்றனர். 

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

இவ்வருடம், அனுர திசாநாயக்க, செயலாளர்- உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்துருவாக்க அமைச்சு, லியாங் யீ, பிரதான நிறைவேற்று அதிகாரி – Huawei Sri Lanka, யாங் சூயோயான், ஆலோசகர் - இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகம், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் Huawei அதிகாரிகள் இலங்கையில் நடைபெற்ற அறிமுக நிகழ்வு, பீஜிங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு நிகழ்வு ஆகியவற்றில் கலந்துகொண்டனர். இலங்கையில் இளைஞர்களின் தொழில்நுட்ப திறமையை மேம்படுத்தும் இந்தத் திட்டத்தை தொடங்குவதில் Huaweiஇன் இந்த முயற்சிகள் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

“இந்த ஆண்டின் மாணவர்கள் முக்கிய திறன்களைக் வெளிக்காட்டியதுடன், Huawei இன் எதிர்காலத்திற்கான விதைகள் திட்டத்தின் மூலம் தங்கள் வாய்ப்பை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் அவர்களுக்கு வெகுமதி அளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், மேலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் புதிய உயரங்களை எட்ட இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான அற்புதமான வாய்ப்பை வழங்கியதற்காக Huawei இற்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்துருவாக்க அமைச்சின் செயலாளர், அனுர திசாநாயக்க தெரிவித்தார்.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

"சீன கலாச்சாரத்தில் எதிர்காலம் இளைய தலைமுறையினரிடம் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பெயரில் குறிப்பிடுவது போல, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் விதைகளையும், சீனா-இலங்கை நட்பின் விதைகளையும் நீங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பேணுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் எங்கள் இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நட்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்,”என்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தின் ஆலோசகர், யாங் சூயோயான் தெரிவித்தார்.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

“உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச ICT துறைக்குத் தேவையான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்ட, உள்ளூர் ICT திறமைகளே டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முக்கிய கூறுகளில் ஒன்று என நாங்கள் நம்புகிறோம்.இந்த அழகான நாட்டில் நியாயமான மற்றும் நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கும் வாய்ப்புகளை உருவாக்க கல்விக்கான வாய்ப்பு மிக முக்கியமானது, அதனாலேயே 2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிர்காலத்துக்கான விதைகள் நிகழ்ச்சித் திட்டத்தினை கொண்டுவருவதன் மூலம் கல்வி மற்றும் அறிவு பரிமாற்றத்தில் நாம் கவனம் செலுத்துகிறோம்," என Huawei இன் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யீ தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “இறுதியாக, முழுவதும் இணைந்த அறிவுபூர்வமான இலங்கைக்காக அதிநவீன ICT தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதன் மூலமும், டிஜிட்டல் உருமாற்றத்தை செயல்படுத்துபவராகவும், நம்பகமான தொழில்துறை ஆலோசகராகவும் கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இலங்கையில், இலங்கைக்காக, இதுவே எங்கள் உறுதிப்பாடு," என்றார்.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

எந்தவொரு தொழிற்துறையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு திறமை முக்கியமானது மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ICT, வியாபார அமைப்பு மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை பெரிதும் மாற்றியுள்ளது. இதன் விளைவாக, ICT கட்டமைப்பு முழுவதும் இந்த மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஏராளமான தொழில்நுட்ப ஊழியர்களின் அவசரமாக தேவைப்படுகின்றனர்.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ICT நிபுணர்களை உருவாக்குவதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் உதவுகிறது, இதனால் ICT தொழில்துறையின் வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் நீண்ட காலத்திற்கு வேலையின்மை விகிதங்களை குறைக்க உதவுகிறது. இது உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கு ICT துறையில் அவர்களின் கற்பித்தல் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மாணவர்களுக்கு உயர் தரமான கல்வி மற்றும் நேரடி அனுபவங்களை வழங்குகிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்கள் மற்றும் உள்ளூர் சந்தையின் கண்டுபிடிப்புத் தேவைகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதால், இந்தத் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ICT தொழிலுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. திறன்களைப் பெறுவதன் மூலம், மாணவர்கள் நம்பிக்கையைப் பெற முடிந்தது, இது அவர்களின் தொழில் மற்றும் பல்கலாச்சார வணிகச் சூழல்களில் சிறந்து விளங்க உதவுகிறது.'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

இந்த மாணவர்கள் ICT மற்றும் சீனாவிற்கான கலாச்சார கல்வி பயணம் முழுவதும் காண்பித்த அர்ப்பணிப்பின் பொருட்டு பட்டமளிப்பு விழாவில் வெகுமதி பெற்றனர்.  இந்த நிகழ்ச்சி நிரலில் ICT தொழில்நுட்பங்களைக் கற்றல், ஆய்வகங்களில் உபகரணங்களை இயக்குதல், Huawei நிறுவனத்தின்  கலாச்சாரம் மற்றும் முகாமைத்துவ அனுபவங்களைப் கற்பது, Huawei இன் கண்காட்சி அரங்குகள் மற்றும் வளாகங்களைப் பார்வையிடுவது, சீன கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வது மற்றும் உள்ளூரில் அழகிய வரலாற்று  இடங்களைப் பார்வையிடுவது ஆகியவை உள்ளடங்கியிருந்தன.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

இது முதலில் இலங்கையில் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து, Huawei இலங்கை பிரதிநிதி அலுவலகம் 10 இலங்கை பல்கலைக்கழக மாணவர்களை ICT மற்றும் கலாச்சார பயணத்திற்காக ஆண்டுக்கு ஒரு முறை Huaweiஇன் எதிர்காலத்துக்கான விதைகள் திட்டத்தின் ஊடாக சீனாவிற்கு அனுப்ப முழுமையாக அனுசரனை வழங்குகின்றது. இலங்கை அரசாங்கத்துடன் 2016 ஆம் ஆண்டில் Huawei தலைமையகத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட தேசமாக இலங்கையை உயர்த்துவதற்கு Huawei பெரும் பங்களிப்பு செய்கிறது.

'Huawei’ யின் ‘எதிர்காலத்துக்கான விதைகள்’-Huaweis-Seeds-for-the-Future

Huawei கடந்த 20 வருடங்களாக இயங்கி வருவதுடன், இலங்கையில் முதற்தர ICT நிறுவனமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. தற்போது, Huawei சுமார் 400 ஊழியர்களைக் கொண்ட முன்னணி ICT தீர்வு வழங்குநராக உள்ளதுடன் (உள்ளூர் பணியாளர்கள் 86%) மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை மறைமுகமாக உருவாக்குகின்றது. அதே நேரத்தில் Huaweiஇனால் உருவாக்கப்பட்ட வலையமைப்பு நாடு முழுவதும் செயற்படுகின்றது.  குறிப்பிடத்தக்க சந்தை பங்கைக் கொண்ட இலங்கையின் சிறந்த ஸ்மார்ட்போன் வழங்குநர் Huawei ஆகும்.


Add new comment

Or log in with...