நீதிமன்றில் சரணடைந்த பாதுகாப்பு படை பிரதானிக்கு விளக்கமறியல் | தினகரன்


நீதிமன்றில் சரணடைந்த பாதுகாப்பு படை பிரதானிக்கு விளக்கமறியல்

நீதிமன்றில் சரணடைந்த பாதுகாப்பு படை பிரதானிக்கு விளக்கமறியல்-CDS Ravindra Wijegunaratne-Remanded Till Dec 05th

பாதுகாப்பு படை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்க விதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் பதினொரு பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான பிரதான சந்தேகநபரான சந்தன  அடைக்கலம் வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்றைய தினம் (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் நிலையில், இன்று (28) காலை நீதிமன்றில் சரணடைந்த அவரை, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது அவர் சார்பாக அவரது சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...