கிழக்கில் மழை; ஏனைய பகுதிகளில் சீரான வானிலை | தினகரன்


கிழக்கில் மழை; ஏனைய பகுதிகளில் சீரான வானிலை

கிழக்கில் மழை; ஏனைய பகுதிகளில் சீரான வானிலை-Weather Forecast-Rain in Eastern Province

கிழக்கு மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...