Thursday, March 28, 2024
Home » இந்திய விண்வெளி ஆய்வுமையம் வகுத்துள்ள 10 திட்டங்கள்!

இந்திய விண்வெளி ஆய்வுமையம் வகுத்துள்ள 10 திட்டங்கள்!

by gayan
December 9, 2023 6:20 am 0 comment

இஸ்ரோ நிறுவனம் அடுத்தாண்டு என்ன ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது என்பது குறித்த முக்கிய தகவல்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்தாண்டு சந்திரயான் 3 மூலம் முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ இறங்கியது.

இதுவரை உலக நாடுகளின் எந்தவொரு ரொக்கெட்டும் தென் துருவத்தில் இறங்கியதே இல்லை. அடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களிலும் இஸ்ரோ இப்போது கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையே 2024ஆம் ஆண்டில் இஸ்ரோ மொத்தம் 10 முக்கிய திட்டங்களை வைத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி மூலம் ஆறு மிஷன்ககள், ஜி.எஸ்.எல்.வி மூலம் 3 மிஷன்கள், ேலான்ச் வெகிக்கல் மார்க்-3 மூலம் ஒன்று என மொத்தம் 10 முக்கிய திட்டங்களை இஸ்ரோ அடுத்தாண்டு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எம்.பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்திருந்தார். அதில் இஸ்ரோ அதன் புதிய ஏவுகணையான எஸ்.எஸ்.எல்.வியை சோதனை செய்யவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ககன்யான் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு ஆளில்லா பயணங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இவை விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்வது குறித்தும் சுற்றுப்பாதை குறித்தும் முக்கிய தகவல்களை இது அளிக்கும். மேலும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் க்ரூ எஸ்கேப் அமைப்பு சரியாகச் செயல்படுகிறதா என்பது குறித்தும் இஸ்ரோ பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல பி.எஸ்.எல்.வி திட்டத்தின் கீழ் ஆறு ரொக்கெட்களை அனுப்ப உள்ளது. விண்வெளி அறிவியல் சார்ந்த ஒருசெய்மதியை அனுப்ப உள்ளது. மேலும்,புவி கண்காணிப்பு தொடர்பான இரண்டு மிஷன்கள், தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு மிஷன்கள், வணிக ரீதியான இரண்டு மிஷன்கள் என மொத்தம் 6 மிஷன்களை பி.எஸ்.எல்.வி ெராக்கெட் மூலம் செயல்படுத்த உள்ளது.

மூன்று ஜி.எஸ்.எல்.வி மிஷன்களையும் வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதன் மூலம் ஒரு வானிலை தொடர்பான செய்மதி, ஒரு நெவிகேஷன் செய்மதி, நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியில் அனுப்பப்பட்டும் செய்மதி என மூன்று செய்மதிகளை இஸ்ரோ அனுப்ப உள்ளது.

அதேபோல அடுத்தாண்டு முதல்முறையாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ெராக்கெட்கள் தொடர்பாகவும் இஸ்ரோ சோதனை செய்யவுள்ளது. நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் கீழ் வாங்கப்பட்ட ஏவுகணை மூலம் ஜிசாட் 20 செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது உள்ளிட்ட இரு திட்டங்களையும் இஸ்ரோ வைத்துள்ளது. இஸ்ரோவுக்கு இது முக்கியமான சோதனையாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ெராக்கெட் அனுப்ப பல நூறு கோடி செலவாகும். இதனால் ஒரே ெராக்கெட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் முறை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

இதன் மூலம் ரொக்கெட் அனுப்பும் செலவு சுமார் 40% வரை குறையும். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதன் மூலம் பல ராக்கெட்களை அனுப்பி வருகிறது. இப்போது இஸ்ரோவும் அதைக் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT