PUBG இன் உத்தியோகபூர்வ மொபைல் பங்காளர் | தினகரன்


PUBG இன் உத்தியோகபூர்வ மொபைல் பங்காளர்

PUBG இன் உத்தியோகபூர்வ மொபைல் பங்காளர்-Vivo Sponsor PUBG

- V17 Pro வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு லைவ் கேமிங் அனுபவம்
- eSports துறையில் முன்னணியில் வளர்ந்து வரும் vivo

Vivo mobile அண்மையில் நிறைவடைந்த உலகின் மிகப்பெரிய மொபைல் கேமிங் போட்டித் தொடராக கருதப்படும்  PUBG MOBILE Club Open 2019 (PMCO 2019) இன் Title அனுசரணையாளராக இணைந்து கொண்டிருந்தது.

2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இணைந்து கொண்ட இந்த பங்காண்மையினூடாக, மொபைல் உற்பத்தியாளர் என்ற வகையில் vivo மிகவும் சிறப்பான கேமிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு உறுதிபூண்டுள்ளமையை எடுத்துக்காட்டியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்றும் பொருட்டு, vivo, eSports துறையில் முன்னணியில் திகழ  PUBG MOBILE (PlayerUnknown's Battlegrounds Mobile) உடனான பங்காண்மையானது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகின்றது. Tencent Games மற்றும் PUBG Corporation இனால் உருவாக்கப்பட்ட இந்த மொபைல் கேமானது சீனா, கொரியா மற்றும் ஜப்பான் தவிர்த்து 200 மில்லியனுக்கு அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது.

“இலங்கையும் உறுதியான PUBG போட்டியாளர்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. V17 Pro, vivo இன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்தர மொபைலானது இலங்கையில் உள்ள PUBG  போட்டியாளர்களுக்கு சிறந்த லைவ் கேமிங் அனுபவத்தைத் தருகின்றது," என vivo Sri Lanka  வின் பிரதான நிறைவேற்று அதிகாரி Kevin Jiang தெரிவித்தார். “V17 Proவின் Game Center பாவனையாளர்களுக்கு அனைத்து கேம் தரவுகளையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்க வாய்ப்பை வழங்குவதுடன், முழுமையான கேமிங்  அனுபவத்தைத் தருகின்றது. CPU, போனின் வெப்பநிலை மற்றும் தரவு செயற்பாடுகள் குறித்து பாவனையாளர்கள் உடனடியாக தெரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது. vivo V17 Proவில் உள்ள Ultra Game Mode, குறுந்தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம், கேமிங்கில் முழுக்கவனத்தையும் செலுத்த வழிசெய்கின்றது,” என Jiang  மேலும் தெரிவித்தார்.

PUBG MOBILE Club Open 2019 இன் உத்தியோகபூர்வ title அனுசரணையாளர் என்ற வகையில் vivo, போட்டியாளர்களை வலுப்படுத்தும் பொருட்டு ஸ்மார்ட் போன்களையும் வழங்கியிருந்தது. Vivo வின் வேகமாக செயற்படும், சக்திமிக்க ஸ்மார்ட்போன்கள் இடைவெளியற்ற கேமிங் அனுபவத்தைத் தருவதுடன், உலகளவில் தொழில்நுட்ப ஆர்வமுள்ள நுகர்வோர் மற்றும் பங்கேற்கும் PUBG போட்டியாளர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு சிறப்பு சாதனமாக இது அமைந்தது.

PUBG MOBILE Club Open 2019 Fall Split Global Finals மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றன. இந்தோனேசியாவைச் சேர்ந்த Bigetron என்ற அணி இதில் வெற்றிவாகை சூடியதுடன், மொத்தப் பரிசுத்தொகையில் பெரும் பங்கான 2.5M அமெரிக்க டொலர்களை தட்டிச் சென்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டித்தொடரில் 16 அணிகள் பங்குபற்றியிருந்தன.

PUBG Mobile பற்றி
2017 ஆம் ஆண்டு இன்டராக்ட்டிவ் கேளிக்கை உலகை ஆட்கொள்ள ஆரம்பித்தது. இந்த விளையாட்டில் நூறு வீரர்கள் வரை பரசூட் மூலம் தனித் தீவில் இறக்கிவிடப்படுவது போலவும் அங்குள்ள ஆயுதங்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களைக் தோற்கடிக்க வேண்டிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க பாதுகாப்பான இடங்களின் அளவானது குறைந்துகொண்டே செல்லும். இறுதியாக இருக்கும் நபர் அல்லது அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை PUBG MOBILE  இன் உத்தியோகபூர்வ Facebook, Twitter மற்றும் YouTube இல் பெற்றுக்கொள்ள முடியும்.

Vivo பற்றி
vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது. வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen, Nanjing, Beijing, Hangzhou, Taipei மற்றும் Silicon Valley ஆகிய 7 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan, Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...