OPPO விடமிருந்து 7 பில்லியன் டொலர் உந்துதல் | தினகரன்


OPPO விடமிருந்து 7 பில்லியன் டொலர் உந்துதல்

OPPO விடமிருந்து 7பில்லியன் டொலர் உந்துதல்-OPPO Inno Day
OPPO நிறுவுனரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான (CEO) டொனி சென், நுண்ணறிவார்ந்த இணைப்பின் எதிர்காலம் குறித்து முக்கிய உரை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படம்.

  • தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை உருவாக்க எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் RMB50 பில்லியன் ($7bn) செலவிட OPPO திட்டமிட்டுள்ளது
  • வாடிக்கையாளரின் மேம்படுத்துவதற்கும் மாற்றுவதற்கும் OPPO ஓர் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மாதிரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் 5G நுகர்வோர் தொழில்நுட்ப தயாரிப்புகளின் (CPE) புதிய தொடரை 2020 முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

OPPO விடமிருந்து 7பில்லியன் டொலர் உந்துதல்-OPPO Inno Day

டிசம்பர் 10, 2019, ஷென்ஜென் - OPPO இன்று தனது OPPO INNO DAY 2019 இனை சீனாவின் ஷென்ஜென் நகரில் நடாத்தியது. ‘எல்லைகளைத் தாண்டி உருவாக்கு’ என்ற கருப்பொருளின் கீழ் இது இடம்பெற்ற இந்நிகழ்வில், நுண்ணறிவு மிக்க இணைப்பின் (intelligent connectivity) சகாப்தத்திற்கான அதன் நுண்ணறிவுகளையும் முன்முயற்சிகளையும் வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில், OPPO ஃபிளாஷ் சார்ஜிங், 5G, புகைப்படம் மற்றும் மென்பொருள் அநுகூலமாக்குதல் (optimization) போன்ற விடயங்களிலான முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனான, ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஸ்மார்ட் ஹெட்ஃபோன்கள், 5G CPE (நுகர்வோர் தொழில்நுட்ப தயாரிப்புகள்), AR மூக்குக்கண்ணாடிகள் போன்ற  ஸ்மார்ட் சாதனங்களை காட்சிப்படுத்தியது.

OPPO விடமிருந்து 7பில்லியன் டொலர் உந்துதல்-OPPO Inno Day

OPPO இன் துணைத் தலைவரும் OPPO ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான லெவின் லியு (Levin Liu) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு குறித்தான முக்கிய உரையை வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்.

தொழில் வல்லுநர்கள், கூட்டாளர்கள் மற்றும் முக்கிய கருத்துகளை கொண்டுள்ள தலைவர்கள், தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி விரிவாகக் கூறும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது. OPPO இன் நிறுவுனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டொனி சென் நிகழ்த்திய முக்கிய உரையில், “5G மற்றும் AI மாற்றங்களுக்கு ஒத்திசைவதால், நுண்ணறிவான இணைப்பு அதிகரித்து வருகிறது. இணைப்பு என்பதானது, ஓர் அத்திவாரமேயாகும் என நாங்கள் நம்புகின்ற அதேசமயம் கூறுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் அதன் சேர்க்கையே எதிர்காலமாக இருக்கும். நுண்ணறிவான இணைப்பு ஆனது, தொழில்நுட்பம் மற்றும் சேவையின் ஒருங்கிணைப்பு, நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு, கலாச்சாரத்தின் ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பம், கலை மற்றும் மனிதநேயத்தின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. ”

சென் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “OPPO ஆரம்பத்தில் இருந்தே ஒரு தொலைபேசி தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி ஒன்றான இருந்து வருகிறது. உண்மையில், ஸ்மார்ட்போன்கள் OPPO விற்கு பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான நுழைவாயிலாக இருந்து வந்துள்ளன என்றே கூற வேண்டும். OPPO மாத்திரமன்றி இம்முழுத் தொழிற்துறையிலும் ஸ்மார்ட்போன்களில் மாத்திரம் கவனம் செலுத்தும் எந்த நிறுவனமும் இருக்காது.” என சுட்டிக்காட்டினார்.

நுண்ணறிவு இணைப்பின் சகாப்தத்திற்கான மூன்று முக்கிய உத்திகள்
எதிர்வரும் 3 ஆண்டுகளில், 5G/6G, AI, AR, பாரிய தரவு உள்ளிட்ட முன்னேறியுள்ள தொழில்நுட்பங்கள் என்பவற்றிற்கு மேலதிகமாக வன்பொருள், மென்பொருள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றில் முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் பொருட்டான பட்ஜெட்டில், 50 பில்லியன் சீன ரென்பின்மி (சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்) இனை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக (R&D) ஒதுக்கப்படும் என சென் இதன்போது அறிவித்தார்.

5G வாய்ப்புகளைப் அடைந்து கொள்ள, OPPO மூன்று முக்கிய உத்திகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஆரம்பமாக, OPPO நிறுவனம் உலக முன்னணி தொழில்நுட்பத்தை உருவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் உறுதியாக இருக்கும். இரண்டாவதாக, ஸ்மார்ட்போன்கள் முக்கிய நுழைவாயிலாக செயல்படுகின்ற நுண்ணறிவான சாதனங்களின் பல்-நுழைவாயில் கொண்ட தொகுதிகளுடனான அமைப்பை OPPO உருவாக்கும்; இறுதியாக, OPPO தொடர்ந்து பயனர் சேவையை மறுபரிசீலனை செய்து அதன் உள்ளடக்கம் மற்றும் சேவை வழங்கல்களை மேம்படுத்தும்.

அதிவேக மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட 5G அனுபவங்களுக்கான சக்தி வாய்ந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப அமைப்பை உருவாக்குதல்
OPPO பிரதித் தலைவரும் OPPO ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான லெவின் லியு தனது முக்கிய உரையில், “புதிய 5G சகாப்தத்தை எதிர்கொண்டு, OPPO தொழில்நுட்ப கண்டுபிடிப்பு 2.0 ஐ நோக்கி செல்லவுள்ளது. இது 'முன்னோக்கிய தொழில்நுட்பம்' மற்றும் ‘பயனருக்கான மதிப்பு 'ஆகியவற்றினால் இயக்கப்படுகின்றது.” என்றார். லியு மேலும் தெரிவிக்கையில், “தொழில்நுட்பங்களுக்கும் சேவைகளுக்கும் இடையில் ஒன்றிணைவதன் முக்கியத்துவம் அவசியமாகி வருவதால், OPPO ஐந்து கோளங்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மாதிரியை உருவாக்கி வருகிறது. உபகரணங்கள், தரவு, கணினியாக்கம், சேவைகள், கருதுகோள்கள் என்பனவே அவையாகும். 5G மற்றும் AI ஆகியவை உட்கட்டமைப்பாக செயற்படுவதோடு, எங்கள் முக்கிய திறன்களாக செயல்படும் இந்த மாதிரியானது, அனைத்து தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து பகுதிகளிலும் நிலையான தொழில்நுட்ப அனுபவத்தை உருவாக்குகிறது. OPPO அதன் எதிர்கால சாதனங்களைத் திட்டமிடுவதற்காக, தனிப்பட்ட கருதுகோள்கள், செங்குத்து கருதுகோள்கள் மற்றும் ஒன்றிணைந்த கருதுகோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘மூன்று வட்டக் கருதுகோள்களை பின்பற்றும்.” என்றார்.

இதன் மூலம், 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் 5G நுகர்வோர் தொழில்நுட்ப சாதனங்களை (CPE) அறிமுகப்படுத்த OPPO திட்டமிட்டுள்ளது என்றும் லியு மேலும் கூறினார்.

நுண்ணறிவார்ந்த இணைப்பின் சகாப்தத்தை உணர பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுதல்

இந்நிகழ்வின் போது, உலகளாவிய முன்னணி தகவல் வழங்குநரான OPPO மற்றும் IHS Markit ஆகியன கூட்டாக இணைந்து “நுண்ணறிவு இணைப்பு: 5G, AI, கிளவுட் ஆகிய சக்திகளுடன் வாய்ப்புகளை கட்டவிழ்த்துவிடுதல்” என்ற வெண்ணிற தாளிலான தலைப்பை வெளியிட்டன. இச்சகாப்தத்தில் தொழில்துறையின் போக்குகள் மற்றும் வாய்ப்புகளை விளக்குவதன் மூலம், இவ்வெண்ணிற தாளானது ஒரு அறிவார்ந்த மற்றும் ஒருங்கிணைந்த தொகுதிக்கான எதிர்கால வளர்ச்சிக்கான பரிந்துரைகளையும் வழிகாட்டுதல்களையும் 5G இனால் இயக்கப்படும் நுண்ணறிவார்ந்த இணைப்பின் மூலம் வழங்குகிறது.

OPPO "5G உலகில் எதிர்கால ஒருங்கிணைப்பு" என்ற தலைப்பிலான ஒரு கருத்துக்களத்தையும் நடாத்தியது, இதில், OPPO வின் பிரதான 5G விஞ்ஞானி ஹென்றி டேங், பிரபல நிதிசார்ந்த எழுத்தாளரும் ஹாங்க்சோ பாஜியுலிங் கலாச்சார படைப்பாற்றல் நிறுவனத்தின் (Hangzhou Bajiuling Cultural Creativity Co., Ltd) நிறுவுனர் மற்றும் Lanshizi நிதி வெளியீட்டு மையம் வு சியாவோ (Wu Xiaobo), IHS Markit நிறைவேற்றுப் பணிப்பாளர் டொம் மொர்ரொட் (Tom Morrod), மைக்ரோசொப்ட் (சீனா) தேசிய தொழில்நுட்ப அதிகாரி கிங் வீ (Qing Wei), பேர்கிங் பல்கலைக்கழகத்தின் விசேட பேராசிரியரும் Center on Frontiers of Computing Studies இன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான Chen Baoquan,  Context Lab இன் நிறுவுனரான Sheng Wu உள்ளிட்ட முன்னணி தொழில் வல்லுநர்கள் அடங்கிய குழுவினர், நுண்ணறிவார்ந்த இணைப்பு குறித்த தமது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

நுண்ணறிவான இணைப்பின் போக்குககளிலிருந்து உருவாகும் உள்ளார்ந்த நுண்ணறிவினை இணைத்து, அவற்றை வெளிப்படுத்தும் வளர்ச்சி நிலைகளையும் அதன் சொந்த தொழில்நுட்ப பாதையையும் கோடிட்டுக் காட்டுவதன் மூலம், OPPO அடிப்படை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதில் உறுதியாக உள்ளது. அதன் இறுதி இலக்கு, அதன் ஸ்மார்ட் சாதன வர்த்தகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உந்துதளித்தல், பயனர்களுக்கு மிகவும் விரிவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்ப அனுபவங்களை வழங்குவதாகும். இம்மாநாட்டில், சென் மேலும் தெரிவிக்கையில், OPPO நிறுவனத்தின் “பென்ஃபென்” (“Benfen”) இன் முக்கிய மதிப்புகளுக்கு தொடர்ந்தும் உண்மையாக இருக்கும் அதே நேரத்தில் நுண்ணறிவான இணைப்பின் எதிர்காலத்தை ஆராய்வதற்கு திறந்த மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில், முழு தொழிற்துறை சங்கிலியில் உள்ள பங்காளர்களுடன் ஆர்வத்துடன் செயற்படும் என்றார்.


Add new comment

Or log in with...