ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Vivo S1 Pro | தினகரன்


ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Vivo S1 Pro

vivo Mobileஇன் புதிய ஸ்மார்ட்போனான S1 Pro, 2020 ஜனவரி மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது vivoவின் பிரத்தியேக புகைப்படத் தொழில்நுட்பம் மற்றும் அதன் சக்திவாய்ந்த மென்பொருளை உள்ளடக்கியது. S1 Proவின் 48MP கெமரா மிகவும் தெளிவாக, சிக்கலின்றி புகைப்படமெடுக்க உதவுவதுடன், மேலும் 3 கெமராக்கள் wide-angle, macro மற்றும் bokeh என எந்தவொரு காட்சிக்கும் ஏதுவானதாக உள்ளன. இதன் இன்னுமொரு முக்கிய அம்சம் என்னவெனில் 32MP முன்பக்க கெமராவாகும், இது இந்தத் துறையில் முன்னணியானதாகும்.

அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புக்கான புதிய எல்லையை நிர்ணயித்துள்ளதுடன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இளைஞர்களை வலுவூட்டி , அவர்களது புதுமையான பாணியை வரையறை செய்கின்றது. இதன் வைரம் போன்ற வடிவமைப்பானது நகைகள் மற்றும் அரண்மனைகளின் படங்களை அடிப்படையாகக் கொண்டது, இது புத்துணர்வளிக்கும் தோற்றத்தைத் தருவதுடன், புதுமையான உணர்வை இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்குகின்றது. இதன் 48MP Quad Camera வைரம் போன்ற வடிவத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இது பயனாளிகள் தமது தனித்துவம் தொடர்பில் அறிந்துகொள்ளத் தூண்டும் புதுமையான வடிவமாகும்.

S1 Pro பயனாளிகளுக்கு 90% screen-to- body ratio உடன் கூடிய 6.38 அங்குல Super AMOLED திரை , 1080P resolution மற்றும் அற்புதமான வண்ண ஒத்திசைவு ஆகியனவற்றை கொண்டு வருகின்றது. சினிமா காட்சி அனுபவத்தை பயனாளிகள் பெற இது உதவுகிறது. பாவனையாளர்கள் தங்கள் S1 Proவினுள் In-Display Fingerprint Scanning மூலம் உடனடியாக நுழைய முடியும். Icon இன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் நவீனமான unlocking animations பாவனையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகின்றன.


Add new comment

Or log in with...