Home » UNDP ஊடக செயலமர்வு: அதிக தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

UNDP ஊடக செயலமர்வு: அதிக தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

- திருமலை, யாழ். நகரில் 90 தமிழ் ஊடகவியலாளர் இணைவு

by Gayan Abeykoon
February 23, 2024 10:44 am 0 comment

க்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்புடன் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வேலைத் திட்டத்தில்,  அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளதாக ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கான தெளிவூட்டல் மற்றும் தொழில் தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சு தொடர்பான அறிவிப்பை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி வேலைத் திட்டம் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்துவதற்கு மேலதிகமாக சமூக சகவாழ்வை மேம்படுத்துவது, குரோத மனப்பான்மையுடனான விடயங்களை எதிர்ப்பது, பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவூட்டுவது, சமூக பொறுப்புக்களை புரிந்து ஊடக சம்பிரதாயங்களை நிலை நாட்டுதல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.   இதற்கான இனக்கப்பாட்டையும் இதன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் இந்த வேலை திட்டம் வடக்கு, கிழக்கு,மேல் மாகாணம், வடமத்திய, வடமேற்கு, தென், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் நடத்தப்பட்டுள்ளன.  377 ஊடகவியலாளர்கள் இந்த வேலைத் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலைத் திட்டத்தில் பலரதும் அர்ப்பணிப்பான உழைப்பு பெறப்பட்டுள்ளதுடன் அதனை நடத்துவதற்கு நிபுணர்கள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பிராந்திய ஊடக ஆலோசகர் கலாநிதி ரங்க கலன்சூரிய, ஊடகத்துறை அமைச்சின் ஆலோசகர் மொஹான் சமர நாயக்க, பத்திரிகை பேரவையின் தலைவர் மஹிந்த பத்திரன, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் சுதர்சன குணவர்த்தன, தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் ஆணையாளர் ஜகத் லியன ஆராய்ச்சி சுரேஷ் நாலக்கு குணவர்தன திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் மதுஹாசினி கலகெதர, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திரி, தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், உதவி தகவல் பணிப்பாளர் ஹர்ஷ அபேகோன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் ஆகியோரும் இந்த நிபுணர் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில் வடக்குக்கான இந்த வேலைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் சுற்றாடலில் இரண்டு தினங்கள் நடைபெற்றன.  இதன் போது மாவட்ட செயலாளர் சிவ பாலசுந்தரம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ராஜாராம் ஆகியோர் விஷேட உரையாற்றினர். இந்த நிகழ்வில் 46 தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்து உரைகளும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. கிழக்கு மாகாணத்திற்கான செயலமர்வு திருகோணமலை ஹோட்டல் சுற்றாடலில் இடம்பெற்றது.இதில்,  46 ஊடகவியலாளர்கள்  கலந்து கொண்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT