2019 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின | தினகரன்

2019 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின

2019 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின-2019 GCE AL Results Released

2019 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் (27) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk அல்லது exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இலவசமாக அறிந்துகொள்ள முடியும்.

கடந்த 2019 ஓகஸ்ட் 05ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை முழுவதிலுமுள்ள 315 இணைப்பு மத்திய நிலையங்களின் ஊடாக 2,278 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெற்றன.

இம்முறை, உயர் தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் (337,704) பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர்.

இப்பரீட்சைகளில் 281,786 பேரே மூன்று பாடங்களுக்கும் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய, 187,167 பேரும் பழைய பாடத்திட்டத்திற்கமைய 94,619 பேரும் தோற்றியுள்ளனர்.

பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 113,637 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமையவும், 67,489 பேரும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத்  தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இம்முறை 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு தோற்றிய 71 (புதிய பாடத்திட்டம் 42; பழைய பாடத்திட்டம் 29) பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

க.பொ.த. (உ/த) பரீட்சை மீளாய்வுக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2019 ஜனவரி 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான மீளாய்வு விண்ணப்பப்படிவங்கள், பெறுபேற்று ஆவணங்களுடன் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விபரங்களை பத்திரிகைகளில் வெளியிடவுள்ளதாக தெரிவித்த அவர், அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு
011 278 4208
011 278 4537
011 3188 350
011 314 0314 இலக்கங்களை தொடர்பு கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உடனடி அழைப்புக்கு 1911

பெறுபேறுகளை பெற


Add new comment

Or log in with...