சப்ரகமுவ, நு'லியா, களுத்துறை, காலியில் பிற்பகலில் மழை | தினகரன்


சப்ரகமுவ, நு'லியா, களுத்துறை, காலியில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, நு'லியா, களுத்துறை, காலியில் பிற்பகலில் மழை-Weather Forecast-Sabaragamuwa-Galle-N'Eliya-Kalutara

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது..

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...