இன்று முதல் மழை சிறிது குறைவடையும் வாய்ப்பு | தினகரன்


இன்று முதல் மழை சிறிது குறைவடையும் வாய்ப்பு

இன்று முதல் மழை சிறிது குறைவடையும் வாய்ப்பு-Showery condition over the island is likely to temporarily reduce to some extent from December 25th).

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து தற்காலிகமாக சிறிது குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 19,072 குடும்பங்களைச் சேர்ந்த 65,316 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...