பாடசாலைகளுக்கான பாடநூல்கள் விநியோகம் 95 வீதம் பூர்த்தி | தினகரன்


பாடசாலைகளுக்கான பாடநூல்கள் விநியோகம் 95 வீதம் பூர்த்தி

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்தாண்டுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 95சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக கல்வியமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். 

2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் பாடநூல்களை விநியோகிக்கும் வகையில் கல்வி அமைச்சு நடவடிக்ைககளை முன்னெடுத்து வருகிறது. 

இதுவரை 95சதவீதமான மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். பாடநூல்களை விநியோகிக்கும் நடவடிக்கை சகல மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெறுகிறது. 

ஆயிரத்திற்கும் 500 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் பணி திணைக்களத்தினால் நேரடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஏனைய பாடசாலைகளுக்கு வலய கல்வி காரியாலங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் Add new comment

Or log in with...