Thursday, March 28, 2024
Home » இலங்கையின் தொழில்நுட்பத்துறையில் ஆரோக்கியத்தை புரட்சிகரமானதாக்கும் FIT HIT 2024

இலங்கையின் தொழில்நுட்பத்துறையில் ஆரோக்கியத்தை புரட்சிகரமானதாக்கும் FIT HIT 2024

by mahesh
February 28, 2024 9:00 am 0 comment

SLASSCOM (Sri Lanka Association for Software and Services Companies) இனால் FIT HIT 2024, எனும் இரண்டு மாத ஆரோக்கிய நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமான மற்றும் சமபலமான பணியாளர்களை கொண்டிருப்பதை இலக்காகக் கொண்டு, உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை இலங்கையின் IT/BPM நிபுணர்கள் மத்தியில் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

தொழில்நுட்பத்துறையில் ஆரோக்கியத்துக்கான தேவை -The FIT HIT 2024 என்பது, தகவல் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த பல நிபுணர்கள் பெருமளவான நேரத்தை கணினியின் முன்னால் செலவிடுவதால் சுகாதார சார் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதை கவனத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருக்கையில் அமர்ந்து, நீண்ட நேரம் உடல் செயற்பாடுகள் குன்றியிருக்கும் நிலையை கவனத்தில் கொண்டு, SLASSCOM இனால் உரிய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. பணியாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான சுகாதார பழக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டி, அவர்களை ஈடுபடச் செய்வதை இலக்காகக் கொண்டு அமைந்துள்ளதுடன், தொழிற்துறையினுள்ளேயும், வெளியிலிருந்தும் திரண்ட ஆதரவைப் பெற்றுக் கொள்வதையும் எதிர்பார்க்கின்றது.

நிகழ்ச்சியின் வெற்றிகரமான செயற்பாட்டில், பிளாட்டினம் அனுசரணையாளர் எனும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. இலங்கையர்களின் நலனை மேம்படுத்துவதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு என்பது, தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்தும் SLASSCOM இன் நோக்கத்துடன் பொருந்துவதாக அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக குறிப்பிடுகையில், “நபர் ஒருவருக்கு தமது உடல் மற்றும் உள நலனை மேம்படுத்துவதனூடாக, சமநிலையான வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதன் காரணமாக, பங்கேற்கும் நபர்களுக்கு தமது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் FIT HIT 2024 இல் எமது ஆதரவை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம் ” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT