ஜம்பட்டா வீதியில் 1 ½ கி.கி. ஹெரோயினுடன் கைது | தினகரன்


ஜம்பட்டா வீதியில் 1 ½ கி.கி. ஹெரோயினுடன் கைது

ஜம்பட்டா வீதியில் 1 ½ கி.கி. ஹெரோயினுடன் கைது-Suspect Arrested with 1-5kg Heroin-Jampettah Street

கொழும்பு, ஜம்பட்டா வீதி ஒழுங்கையில் ஒன்றரை கிலோகிராம் (1 .5kg) ஹெராயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ரூபா 1 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (16) இரவு, கொழும்பு வடக்கு விசேட வீதித் தடை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, ஹெராயினை கொண்டு செல்லும்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மருதான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...