“விஷம பாக” திரைப்படத்தின் முதல்நாள் காட்சி விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி | தினகரன்


“விஷம பாக” திரைப்படத்தின் முதல்நாள் காட்சி விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி

“சிறுவர்களின் உள்ளங்களை புன்படுத்தாத ஆசிரியர் தலைமுறை மற்றும் ஆசிரியர் உள்ளங்களை புன்படுத்தாத சிறுவர் பரம்பரை” ஒன்றை தோற்றுவிக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள “விஷம பாக” திரைப்படத்தின் முதல்நாள் காட்சி நேற்று (15) வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றினார். வளர்ந்த ஒருவரின் ஒரு வார்த்தை எவ்வளவு தூரம் சிறுவர் உள்ளத்தை பாதிக்கக்கூடியது என்பது “விஷம பாக” திரைப்படத்தின் முக்கிய கதையம்சமாக உள்ளது. உலகின் சிறந்த சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட விருதுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்றுள்ள இத்திரைப்படம், லலித் ரத்னாயக்கவின் இயக்கத்தில் உருவானதாகும்.

இத்திரைப்படத்திற்கு பங்களித்தவர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.


Add new comment

Or log in with...