மின் திருத்த வேலை; கம்பஹா, களுத்துறை பகுதிகளில் நீர் வெட்டு | தினகரன்


மின் திருத்த வேலை; கம்பஹா, களுத்துறை பகுதிகளில் நீர் வெட்டு

மின் திருத்த வேலை கம்பஹா, களுத்துறை பகுதிகளில் நீர் வெட்டு-Water Cut-Kalutara-Gampaha

களுத்துறை பகுதியில் 11½ மணித்தியாலம் நீர் வெட்டு
கம்பஹா பகுதியில் 24 மணித்தியாலா நீர் வெட்டு

நீர் மின்சார சபையின் திருத்த வேலை காரணமாக, ஒரு சில பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்டவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கம்பஹா பிரதேசங்களுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு
இதேவேளை, கம்பஹா பகுதிகளில் நாளை (17) காலை 8.00 மணி முதல் அடுத்த நாள் காலை 8.00 மணி வரையான காலப்பகுதியில் 24 மணி நேரத்திற்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய பேலியகொடை, மாபோல, வத்தளை, ஜாஎல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபை பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என சபை அறிவித்துள்ளது.

சபுகஸ்கந்த மின் நிலைய திருத்த வேலை காரணமாக குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களுத்துறை பிரதேசங்களுக்கு 11½ மணித்தியால நீர் வெட்டு
வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பேருவளை ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் நாளை (17) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 7.30 மணி வரை தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பொம்புவல, மக்கொன, களுவாமோதறை, மொரகல்ல, அளுத்கம, தர்காநகர், பெந்தோட்டை ஆகிய இடங்களில் 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...