பெருந்தோட்டப் பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு விசேட மேம்பாட்டுத் திட்டம் | தினகரன்


பெருந்தோட்டப் பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு விசேட மேம்பாட்டுத் திட்டம்

இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தோட்டப் பகுதி மக்களின்  சுகாதார பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூக அடிப்படை திட்டமொன்றின் மூலம் மலசல கூடங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

பிராந்திய சுகாதார பாதுகாப்பு, ஆரோக்கியம் தொடர்பாக துரித செயற்பாட்டுக் கற்கை பற்றிய செயலமர்வை நீர்கொழும்பு கோல்டிசேன்ட் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.  

நீர்வழங்கல் மற்றும் சுகாதார பாதுகாப்பு இணைப்புக் கவுன்சில், பிரிட்டனின் அபிவிருத்திக் கற்கை நிலையம் என்பவற்றின் உதவியுடன் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கிவரும் சுகநலப் பாதுகாப்புக்கான பிராந்தி நிலையம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்தது. சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் இதில் கலந்துகொண்டனர்.      தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர், இத்துறையில் எமக்குள்ள மிகவும் பாரிய பிரச்சினையாக இருப்பது தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிக்கார்கள் தோட்டப்பகுதி மக்களுக்கு கழிவறைகளை அமைத்துக் கொள்ள உதவி செய்யாது இருப்பதாகும். அரசாங்கம் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மக்களுக்கு கழிவறைகளை அமைத்துக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அந்த மக்களினதும் பங்களிப்பைப் பெற்று, மிக விரைவில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க வழியேற்படும்.

இத்திட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து வள மற்றும் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். உலக வங்கியின் உதவிகளைப் பயன்படுத்தி இத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம். நிகழ்வில்  நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சீ.எம் நபில், பிரிட்டனில் இருந்து செயற்படும் அபிவிருத்திக்கான கற்கை நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி ரொபட் சேம்பர்ஸ், சர்வதேச நீர் வழங்கல், சுகாதார பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கவுன்சில் பணிப்பாளர் வினோத் மிஷ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.    


Add new comment

Or log in with...