ஒற்றுமைக்கு யார் குந்தகம் என்பதை மக்கள் அறிவார்கள் | தினகரன்


ஒற்றுமைக்கு யார் குந்தகம் என்பதை மக்கள் அறிவார்கள்

ஒற்றுமைக்காக அனைவரையும் நாங்கள் அழைத்துள்ளோம். அந்த ஒற்றுமையை விரும்பாமல் இருக்கின்ற எவரையும் கட்டாயப்படுத்தி கொண்டுவர முடியது. ஆகவே ஒற்றுமைக்கு யார் குந்தகம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மாற்று அணிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக மாற்று அணியினர் வெளிப்படுத்தியுள்ள தமது நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

எங்களது அத்தகைய அழைப்பை அவர்கள் நிராகரிப்பதற்கான பூரண சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஏன் இக் காலகட்டத்தில் ஒரு மாற்று அணி உருவாகக் கூடாது என்பதற்கான காரணங்களையும் நான் சொல்லியிருக்கிறேன். அந்தக் காரணங்களை மக்களும் அறிவார்கள்.

ஆகையினாலே இவர்கள் இணங்கி வரமாட்டோம் மாற்று அணியொன்றை உருவாக்கத் தான் போகின்றோம் என்று உறுதியாக நின்றாலும் கூட அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மக்கள் ஆதரவை கொடுக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

மக்களுடைய சிந்தனை எந்தவேளையிலும் தெளிவாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் ஒரே அணியில் நிற்பதுதான் அத்தியாவசியம் என்பதை மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் ஒரு வடிவமும் கொடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...