கழிவுத் தேயிலை வியாபாரத்தை ஒழிக்க தொடர் சுற்றிவளைப்புகள் | தினகரன்


கழிவுத் தேயிலை வியாபாரத்தை ஒழிக்க தொடர் சுற்றிவளைப்புகள்

நாட்டுக்கு பாரிய அந்நிய வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ‘சிலோன் ரீ’ யின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கழிவுத் தேயிலை வியாபாரத்தை ஒழிப்பதற்கு தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருவதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டுமுதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட 270 சுற்றிவளைப்புகளில் 446 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 38,44,074 கிலோ கிராம் கழிவுத் தேயிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

கண்டி மாவட்டத்தின் உடனுவர, வெல்மப்பொட, தவுலகல, பூவெலிகட, அன்தெச்ச, முறுதலாவ உள்ளிட்ட பிரதேசங்களிலும், அம்பலங்கொட, எல்பிட்டிய, இரத்தினபுரி, போலியாகொட உள்ளிட்ட பிரதேசங்களிலும் பாரிய அளவில் இடம்பெற்ற கழிவுத் தேயிலை வியாபாரங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வர்த்தகர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு கழிவுத் தேயிலை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தெரியப்படுத்துமாறும்  பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் கேட்டுக்கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...