பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி | தினகரன்


பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி

பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி-Britain Election PM Boris Johnson Won vs Jeremy Corbyn

- 650 ஆசனங்களில் 326 பெற்றால் வெற்றி
- பொரிஸ் ஜோன்சன் 364 ஆசனங்கள்
- எதிர்த்து போட்டியிட்ட ஜெரிமி கோர்பினின் தொழிலாளர் கட்சி 203 ஆசனங்கள்

பிரிட்டனில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி 365 ஆசனங்களை பெற்றுள்ளதோடு, அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெரிமி கோர்பின் (Jeremy Corbyn) தொழிலாளர் கட்சி 203 ஆசனங்களையும் கைப்பற்றி தோல்வியடைந்துள்ளது.பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி-Britain Election PM Boris Johnson Won vs Jeremy Corbyn

ஸ்கொட்லாண்ட் தேசிய கட்சி 48 ஆசனைங்களையும் (1,242,372) லிபரல் ஜனநாயக கட்சி 11 ஆசனங்களையும் பெற்றுள்ளதோடு, ஏனைய கட்சிகள் 10 இற்கும் குறைவான ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

இதில் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு கோடி 39 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும் (13,966,565), ஜெரிமி கோர்பின் தொழிலாளர் கட்சிக்கு ஒரு கோடி 2 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும் (10,295,607) கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரிட்டிஷில் கடந்த மூன்று ஆண்டுகளில் இடம்பெறும் தீர்க்கமான மூன்றாவது பொதுத் தேர்தலில் நேற்று மக்கள் வாக்களித்தனர்.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை வாக்குப் பதிவு இடம்பெற்றது.

2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து பிரிட்டிஷில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் டிசம்பரில் இடம்பெறும் முதல் தேர்தலாகவும் இது இருந்தது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளை பெறுபவர்களைக் கொண்டு இந்தத் தேர்தல் மூலம் 650 எம்.பிக்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

மொத்தமாக 650 எம்.பிக்கள் தெரிவு செய்யப்படுவர் என்பதோடு, இதில் அரைவாசியுடன் ஒரு ஆசனத்தை அதிகமாக பெறும் கட்சி, அதவாது 326 தொகுதிகளை வெற்றியீட்டும் கட்சி வெற்றி பெறும்.

இதன்போது பிரிட்டிஷில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கும் பிரெக்சிட் விவகாரம் குறித்து மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் மக்கள் தமது தீர்ப்பை வழங்குவதாகவும் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு ஜோன்சன் விரும்பும் அதேவேளை, இந்த விவகாரம் குறித்து இரண்டாவது முறை சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு கோர்பின் விரும்புகிறார்.

இங்கிலாந்தில் சம்பிரதாயமாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே தேர்தல் இடம்பெறுகிறது. எனினும் கடந்த ஒருசில ஆண்டுகளுக்குள் மற்றொரு திடீர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு கடந்த ஒக்டோபரில் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். 1974 ஆம் ஆண்டுக்குப் பின் குளிர்காலத்தில் இடம்பெறும் முதல் தேர்தல் இதுவென்பதோடு, 1923 ஆம் ஆண்டுக்குப் பின் டிசம்பரில் இடம்பெறும் முதல் தேர்தலும் இதுவாகும்.


Add new comment

Or log in with...