புகையிரதம் மோதி யானை உயிரிழப்பு | தினகரன்


புகையிரதம் மோதி யானை உயிரிழப்பு

வவுனியா, செட்டிகுளம் மீடியா பண்ணைப்பகுதியில் புகையிரதம் மோதி யானையொன்று உயிரிழந்துள்ளது.

இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கி சென்ற புகையிரதமேதண்டவாளத்தில் நின்ற யானைமீதுமோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பார்வையிட்டதுடன் யானை 20 வயதுடையது எனவும் தெரிவித்துள்ளனர்.

செட்டிகுளம் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு யானைகள் உயிரிழக்கும்  சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வரும் நிலையில் செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் அமைக்கப்பட்ட யானைகள் தண்டவாளத்தில் வரும்போது சமிக்ஞை காட்டும் இயந்திரம் செயலிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(வவுனியா விசேட நிருபர்– கே. வசந்தரூபன்)

 


Add new comment

Or log in with...