MCC, ACSA, SOFA வில் கைச்சாத்திடும் தீர்மானம் இல்லை | தினகரன்


MCC, ACSA, SOFA வில் கைச்சாத்திடும் தீர்மானம் இல்லை

MCC, ACSA, SOFA வில் கைச்சாத்திடும் தீர்மானம் இல்லை-Govt Dont Have Idea to Sign MCC-ACSA-SOFA

சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொ.ஜெ. பர்சானா ஜெமீல் உச்சமன்றில் தெரிவிப்பு

மில்லினியம் சலேஞ்ச் கோபரேஷன் ஒப்பந்தம் (MCC), எக்சா (ACSA) மற்றும் சோபா (SOFA) ஒப்பந்தங்களில் கையெழுத்திட அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (13) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை வழங்குமாறு, சட்டத்தரணி தர்ஷன வேரதுவகெ, அரசு வைத்திசய அதிகாரிகள் சங்கம் மற்றும் பௌத்த தகவல் மத்தியநிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜினானந்த தேரர் ஆகியோரினால் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று (13) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே திணைகக்ளம் இதனைத் தெரிவித்தது.

குறித்த மனு விசாரணை, புவனேக அலுவிஹாரே, எஸ். துரைராஜா, முர்து பெனாண்டோ, எல்.டி.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று (13) இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

திணைக்களம் சார்பின் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பர்சானா ஜெமீல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, குறித்த ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வருடம் மார்ச் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டது.


Add new comment

Or log in with...