கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு | தினகரன்


கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளையதினம் (14) 24 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை (14) சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு 8.00 மணி வரை இந்நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை, கொம்பனித் தெரு, கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை, தெமட்டகொடை, மருதானை, புறக்கோட்டை, ஆட்டுப்பட்டிதெரு, கொட்டாஞ்சேனை - கொச்சிக்கடை, கிராண்ட்பாஸ், மட்டக்குளி - மோதறை (01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15) ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 05 மற்றும் 06 (நாராஹேன்பிட்டி - கிருலப்பனை, வெள்ளவத்தை - பாமன்கடை) ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...