களுத்துறையில் 3 வாரங்களுக்கு நீர் விநியோக மட்டுப்பாடு | தினகரன்


களுத்துறையில் 3 வாரங்களுக்கு நீர் விநியோக மட்டுப்பாடு

களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அவ்வப்போது நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என்பதோடு, குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கேத்ஹேன நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணி காரணமாக   இவ்வாறு    நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என சபை தெரிவித்துள்ளது

இதற்கமைய வாதுவை, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொட மற்றும் பயாகல ஆகிய பகுதிகளுக்கான நீர்வழங்கல் அவ்வப்போது தடைப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலோமினாவத்த, போம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதறை, மொறகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலும்  நீர்வழங்கல் அவ்வப்போது தடைப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...