எண்ணெய் கலப்பு காரணமாக மொணராகலையில் நீர் வெட்டு | தினகரன்


எண்ணெய் கலப்பு காரணமாக மொணராகலையில் நீர் வெட்டு

மொணராகலை நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நாளை (03) வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மொணராகலையிலுள்ள கும்புக்கன்ஓயா நீர்த்தேக்கத்தில் எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுப்பொருள் கலந்துள்ளதாகவும் அவற்றை அகற்றும் நோக்கில்   நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் எல்வீசியா நீராவி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மொணராகலை கும்புக்கன்ஓயா நீர்த்தேக்கத்தில் எண்ணெய் மற்றும் கிறீஸ்  கழிவுகள் கலந்தமை காரணமாக, கடந்த 30 ஆம் திகதி பிற்பகலிலிருந்து மொணராகலை நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.  

 


Add new comment

Or log in with...