நுரைச்சோலை மின் நிலைய செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின | தினகரன்


நுரைச்சோலை மின் நிலைய செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப கோளாறு நேற்று இரவு வழமைக்கு கொண்டுவரப்பட்டபோதும், இதன் அனைத்து செயற்பாடுகளும் இன்று முதல் முறையாக முன்னெடுக்கப்படுமென மின்சக்தி எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன நேற்று தெரிவித்தார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று நாட்டின் பல பாகங்கள் இருளில் மூழ்கியமைக்காக இலங்கை மின்சார சபை வருந்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுரைச்சோலை அனல் மின்நி லையத்தின் இரண்டாவது யுனிட்டில் நேற்றுமுன்தினம் காலை 11மணியளவில் இடம்பெற்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப அதிகாரிகளும் நுரைச்சோலைக்கு விரைந்து தொழில்நுட்ப கோளாறை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

கோளாறு இரவு 7 மணியளவில் திருத்தப்பட்டாலும் இன்று காலை முதல் இதன் அனைத்து செயற்பாடுகளும் வழமை போன்று இருக்குமென்றும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

(லக்ஷ்மி பரசுராமன்) 


Add new comment

Or log in with...