ரஞ்சித் சொய்சாவின் ஐ.ம.சு.மு. எம்.பி. பதவி ஐ.தே.கவுக்கு | தினகரன்


ரஞ்சித் சொய்சாவின் ஐ.ம.சு.மு. எம்.பி. பதவி ஐ.தே.கவுக்கு

ரஞ்சித் சொய்சாவின் ஐ.ம.சு.மு. எம்.பி. பதவி ஐ.தே.கவுக்கு-Ranjith De Zoysa MP Post to Waruna Liyanage UNP Nivithigala Organizer
வருண லியனகே (இடது) ரஞ்சித் டி சொய்சா

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை முடிவு

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் மரணம் காரணமாக உருவான எம்.பி. பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, தேர்தல் ஆணைக்குழு தனது முடிவை நாளை (10) நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழு  கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, ஆணைக்குழுவின் முடிவு இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்கப்படும்.

இதேவேளை, காலஞ் சென்ற ரஞ்சித் டி சொய்சாவுக்கு அடுத்த படியாக, 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளை, அப்போதைய ஐ.ம.சு.மு. வேட்பாளர் வருண லியனகே பெற்றிருந்தார்.

அவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நிவித்திகலை ஆசனத்திற்கான அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...