இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல் இறுதி பிரசாரத்தில் தலைவர்கள் | தினகரன்


இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல் இறுதி பிரசாரத்தில் தலைவர்கள்

பிரித்தானிய பொதுத்தேர்தல் இன்று இடம்பெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணிவரைக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே காணப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் முக்கிய பிரச்சினைகளை கையிலெடுத்து நேற்று (புதன்கிழமை) இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் நேற்று இடம்பெற்ற பிரசாரத்தில், தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் “நம்பிக்கைக்கு வாக்களிப்பார்” என்றும், பொரிஸ் ஜோன்சன் “டோரிகளால் மட்டுமே பிரெக்ஸிற்றை முடிக்க” முடியும் என்றும் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, லிப் டெம் தலை வர் ஜோ ஸ்வின்சன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேறுவதைத் தடுக்க தனது வேட்பாளர்களுக்கு ஆதரிக்குமாறு மக்களை கோருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு ஆறு வாரப் பிரசாரம் அதன் முக்கியமான இறுதி நேரத்திற்குள் நுழையும் நிலையில் ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியின் தலைவர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தனது இறுதி பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிபிசி செய்தி சேவையில் இடம்பெற்ற விசேட செவ்வியில் பேசிய அவர், “நவீன காலங்களில் எந்த டோரி பிரதமருக்கும் ஸ்கொட்லாந்து மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும்” என பிரதமருக்கு தெரிவித்திருந்தார்.

நடைபெறவுள்ள 2019 பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியைவிட பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சர்வேற்றிவ் கட்சி 10 புள்ளிகள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...