திருமலையில் தாயால் கொன்ற சிசுவின் சடலம் தோண்டி எடுப்பு | தினகரன்


திருமலையில் தாயால் கொன்ற சிசுவின் சடலம் தோண்டி எடுப்பு

திருமலையில் தாயால் கொன்ற சிசுவின் சடலம் தோண்டி எடுப்பு-Fetus Body Exhumed-Trincomalee

கள்ளத் தொடர்பில் கிடைத்த குழந்தை என முறைப்பாடு

திருகோணமலையில் தாயாரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்று ஒரு மாதத்திற்கு பின்னர்  இன்று (12) தோண்டி எடுக்கப்பட்டது.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 09ஆம் திகதி குறை மாதத்தில் பெற்ற சிசுவை சட்டவிரோதமான முறையில் புதைத்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமலையில் தாயால் கொன்ற சிசுவின் சடலம் தோண்டி எடுப்பு-Fetus Body Exhumed-Trincomalee

கிராம உத்தியோகத்தரின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாடு தொடர்பில், இன்றையதினம் (12) திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம். எச். எம். ஹம்ஸா தலைமையில் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் ருச்சிர நதீர மற்றும் பொலிஸார்  முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

சந்தேகநபரான குறித்த பெண், திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த நிலையில் தனது கணவரை விட்டு தனிமையாக வாழ்ந்து வந்ததாகவும் இதேவேளை  தன்னுடன் பழகிய நபருடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறை மாதத்தில் பிள்ளை பிறந்ததாகவும், ஊசி மூலமாக பிள்ளையை வெளியேற்றியதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

திருமலையில் தாயால் கொன்ற சிசுவின் சடலம் தோண்டி எடுப்பு-Fetus Body Exhumed-Trincomalee

இந்நிலையில் சிசுவின் தாயாரை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...