"கிழக்கு ஆளுநரானமை மாபெரும் கௌரவம்"
கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் கடமையேற்பில் தெரிவிப்பு
தூர நோக்குடைய தலைவருடைய தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்றமை மாபெரும் பாக்கியமாக கருதுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்தார்.
இன்று, (12) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக கடமையேற்ற பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தன்னால் தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருந்துவதாகவும், குறுகிய காலத்தில் தமிழ் மொழியை கற்று உரையாற்றுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தொடர்ந்தும் உறையாற்றுகையில் கிழக்கு மாகாணம் அழகிய ஒரு மாகாணமாகும். அது மாத்திரமல்ல ஏராளமான இயற்கை வளங்கள் மனித வளங்கள் கொண்ட ஒரு மாகாணமாக காணப்படுகின்றது.
எனவே இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி நாட்டை போசிக்ககூடிய தன்மை காணப்படுவதாகவும் இது எமக்கே உரித்தானது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
பௌத்த கலாசார மரபுரிமைகள் கொண்ட நாடாக இந்நாடு காணப்பட்ட போதும் ஏனைய இன மக்கள் கலாசாரங்களை பின்பற்றி கௌரவமான முறையில் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் நாட்டு நலன் கருதி இளைஞர்கள் பாதைகளை, பொது இடங்களை அழகுபடுத்துகின்றன முயற்சிகளை சுயமாக மேற்கொண்டு வருவதாகவும் இம்முயற்சி நாட்டுக்கு முன் மாதிரியாக அமைகின்றது.
அதேபோல இளைஞர்கள் கைவிடப்பட்ட காணிகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த முயற்சி அரச அதிகாரிகள் ஏனையவர்கள் முன்மாதிரியாகக் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க கூடியவர்களாக மாறவேண்டும் என்று இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட சௌபாக்கிய இலக்கில் வறுமையை ஒழித்தல் முதன்மையான நோக்கமாக காணப்படுவதாகவும் வறுமையை ஒழிக்க நிவாரணம் அல்லது மானியங்கள் வழங்கல் ஆகியவற்றால் மாத்திரம் முடியாது என்றும் இவற்றை ஒழிக்க பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் சுய தொழில் அடிப்படையிலான வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்க தான் முன் மொழிவதாக இதன்போது அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண ஆளுநரின் தாயார் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
Add new comment