மனிதவள வினைமுறை திட்டம் விரைவில் உருவாக்கம் | தினகரன்


மனிதவள வினைமுறை திட்டம் விரைவில் உருவாக்கம்

அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசாங்க சேவைக்கு தேவையான அதிகாரங்களை வழங்கும் வகையிலான மனிதவள வினைமுறைத் திட்டமொன்றை அரசாங்கம் விரைவில் செயற்படுத்தவுள்ளது.

இது தொடர்பான ஊழியர்கள் சேவையொன்று விரைவில் நிறைவேற்றப்பட்டு அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கிடையே களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

முன்னர் நான் தொழில் அமைச்சராக இருந்த 2001ஆம் ஆண்டு ஆரம்பித்த உற்பத்தி செயலகம் தற்போது அரச சேவையின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்ற சுபீட்சத்தின் வரிசை என்ற கருத்து மேற்படி மனித வள வினைமுறைத் திட்டம் என்ற புரட்சிகர மாற்றத்தின் மூலம் விரைவில் நிஜமாக்கப்போகிறது.

அதற்கேற்ப அரசியல் தலையீடற்ற அரசாங்க சேவை, சம்பள முரண்பாடுகளை, ஊழியர்கள், கோவை மூலம் நீக்குதல், இல்லாதாக்கப்பட்ட பென்சன் ஆகியவை மீண்டும் அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கும்.

அத்துடன் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவை ஈடுசெய்யக் கூடிய சம்பளம் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சுகாதார உத்தரவாத மற்றும் அரசாங்க மற்றும் தனியார்துறையில் எந்தவொரு நிலையிலும் வேலை இழப்பதை எதிர்கொள்ளக்கூடிய சமூக பாதுகாப்புடன் கூடிய சூழல் ஆகியவை மேற்படி வினைமுறைத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் என்றார்.


Add new comment

Or log in with...