பல்வேறு உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு | தினகரன்

பல்வேறு உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு

 
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 
மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில் ஆராயும் வகையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் யோசனைக்கமைய நிதியமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
 
அந்த வகையில், பல்வேறு மாவட்டங்களில் தற்போது நிலவும் வரட்சி நிலையைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய எதிர்வரும் இரு மாதங்களுக்கு ரூபா 5,000 பெறுமதியான உலர் உணவுப் பொருள் பொதியை வழங்குவதற்கும் நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக நிதி மற்றம் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
அதற்கமைய, 1kg இற்கு வரிக் குறைப்பு
 
- இறக்குமதி செய்யப்படும் அரிசி விசேட வர்த்தக வரி (SCL) - ரூபா 5 இலிருந்து ரூபா 0.25
(ரூபா 4.75 குறைப்பு)
- இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா செஸ்வரி - ரூபா 25 இலிருந்து ரூபா 15
(ரூபா 10 குறைப்பு)
- கோதுமை விதை - ரூபா 9 இலிருந்து ரூபா 6
(ரூபா 3 குறைப்பு)
- இறக்குமதி செய்யப்படும் (ஈர) மீன் விசேட இறக்குமதி வரி - ரூபா 75 இலிருந்து ரூபா 25
(ரூபா 50 குறைப்பு)
- கோழி தீனுக்கான சோளம் - வரிகள் அனைத்து நீக்கப்பட்டு ரூபா 10 புதிய வரி
(15% இறக்குமதி வரி, 15% வற் வரி, 7.5% துறைமுகம், விமானநிலைய வரி, 2% தேசிய கட்டுமான வரி, 35% செஸ் வரி நீக்கம் - ரூபா 60 - 70 குறைப்பு, 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும்)
 
இவ்வரி குறைப்புகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட அத்தியவசிய  பொருட்களுக்கான விலை மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரிசி, சீனி, உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட, 47 அத்தியவசிய பொருட்களுக்கான பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு, அரசாங்கத்தினால் அதற்கென விசேட வரிகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட விவசாய உற்பத்திகள் சந்தைக்கு வரும் சந்தர்ப்பங்களில், அதற்கான வரிகளை அரசாங்கம் அதிகரித்து விவசாயிகளுக்கு இலாபமளிக்கும் வகையிலான திட்டத்தை மேற்கொண்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 
 
 

Add new comment

Or log in with...