தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் இராஜினாமா கடிதம் நிராகரிப்பு | தினகரன்


தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் இராஜினாமா கடிதம் நிராகரிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பதவி விலகல் இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.  

கடந்த வாரம் தனது இராஜினாமாக் கடிதத்தை ஆணைக்குழுத் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.  

நேற்று முன்தினம் (09) ஜனாதிபதி இந்த இராஜினாமாக் கோரிக்கையை நிராகரித்து ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரியவுக்கு பதிலளித்துள்ளார்.  

எதிர்வரக்கூடிய பொதுத் தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தியதன் பின்னர் இராஜினாமா தொடர்பில் ஆராய முடியுமென ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்தார்.    

எம். ஏ. எம். நிலாம்    


Add new comment

Or log in with...