கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட முடிவு? | தினகரன்


கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட முடிவு?

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.  

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனாவசியமான வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.  

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

இதனால், பெரும் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகப் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்குக் கட்டணங்களை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளைப் பூர்த்திசெய்யாத பல பஸ்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிக கட்டணத்தைச் செலுத்தும் பயணிகளுக்குத் தேவையான உயர்தர சேவைகளை வழங்காத பஸ்களை இனங்காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.  

இது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்றை அமைக்கவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. 


Add new comment

Or log in with...