2019 பிரபஞ்ச அழகி தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி | தினகரன்


2019 பிரபஞ்ச அழகி தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி

2019 பிரபஞ்ச அழகி தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி-Miss South Africa Zozibini Tunzi crowned Miss Universe 2019
கடந்த வருடம் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் கெட்ரியோனா கிரே (Catriona Gray) இவ்வருடன பிரபஞ்ச அழகி தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி (Zozibini Tunzi) இற்கு மகுடம் சூட்டுகின்றார்.

 

 

2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி (Zozibini Tunzi) மகுடம் சூடியுள்ளார்.

இப்போட்டியில் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்ட 90 போட்டியாளர்களிடையே தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவாகியுள்ளார்.

தென்னாபிரிக்க அழகியாக (Miss South Africa) தேர்ந்தெடுக்கப்பட்ட, 26 வயதான சொசிபினி துன்சி , பொதுமக்கள் உறவு அதிகாரியாக தொழில் தகைமையைக் கொண்ட இவர், பால்நிலை வன்முறைக்கெதிராக பணியாற்றும் ஒரு செயற்பாட்டாளராகவுமுள்ளார்.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லாண்டாவில் இடம்பெற்ற பிரபஞ்ச அழகி போட்டிக்கான இறுதிச் சுற்றில் இவருக்கான கிரீடம் அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடம் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico) நாட்டைச் சேர்ந்தவரும், மூன்றாமிடம் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவரும் தெரிவானர்.

கடந்த வருடம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கெட்ரியோனா கிரே (Catriona Gray) பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...