‘ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ்’வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் இரவு இன்று | தினகரன்


‘ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ்’வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் இரவு இன்று

இலங்கை ஹட்ச் டெலிகொமினிகேஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சங்கம், ஆசிய மோட்டார் கார் ஓட்டுநர்களின் சங்கம், இலங்கை மோட்டர் ஸ்போர்ட்டஸ் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ்’ போட்டித் தொடரின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் இரவு இன்று இரத்மலானை ஈகல் லேக் சையிட் மண்டபத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் நடைபெறுவுள்ளது. ஆண்டின் சிறந்த வீரர்கள் இருவருக்கு விருதுகளுடன் நவீன மோட்டார் சைக்கிள்கள் வழங்கவுள்ளதுடன் மேலும் தொடரில் திறமைகாட்டிய வீரர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இம்முறை ‘இலங்கை ஹட்ச் சுப்பர் சீரிஸ்’ போட்டி தொடருக்கு பொக்ஸ்ஹில்ஸ் சுப்பர் குரோஸ், கென்வே மோட்டர் குரோஸ், காவல்ரி சுப்பர்குரோஸ், கமாண்டோ செலேன்ஞ், கட்டுகுருந்த போட்டித் தொடர், கொழும்பு சுப்பர் குரோஸ் ஆகிய போட்டித் தொடர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதில் பொக்ஸ்ஹில்ஸ் போட்டித் தொடரின் போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் காரணமாக அத்தொடர் இடை நடுவில் கைவிடப்பட்டுருந்தது. ஆனால் அத்தொடரிலும் அதுவரை நடைபெற்ற போட்டிகளில் திறமைகாட்டிய வீரர்களுககு வருடாந்தம் வழங்கப்படும் ‘சிலாடர்’ விருது வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் வாகன தொடர் போட்டிகளின் முன்னேற்றம் கருதி பங்களிப்புச் செய்த முன்னாள் மோட்டார் ஓட்டுநர்கள், அனுசரணையாளர்களும் இவ்விழாவின் போது கெரவிக்கப்படவுள்ளனர்.

எஸ். எல். / ஜி. டி. 3500 சி. சி. போட்டித் தொடரின் சிறந்த வீரர்களாக அஷான் சில்வா, உஷான் பெரேரா முன்னிலை பெற்றுள்ளதுடன், எம். எக்ஸ். ரேசிங் 175-250 சி சி (4டீ) /100-125 சி. சி. (2டி) சம்பியன் மோட்டார் சைக்கிள் போட்டிப் பிரிவில் சிறந்த வீரராக ஜாக் குணவர்தனவும் இவோன் பியாஜி குணவர்தனவும் முன்னிலை பெற்றுள்ளனர்.

மற்றைய போட்டிப் பிரிவுகளான எஸ். எல். / என். குழுவின் 1500 சி. சி. போர்ட் லேசர்/ மெஷ்டா மோட்டார் கார் போட்டியில் தரிது தர்மராஜாவும் மிஹான் பீரிஸ்சும், எஸ். எல். / என். குழுவின் 1500 சி. சி. மோட்டார் கார் போட்டிப் பிரிவில் சஹீர் வஹாபும் இர்ஷான் பாமாரும், எஸ். எல்./எச். அணியின் 1600 சி. சி. மோட்டார் கார் போட்டிப் பிரிவில் ரன்திக நிரோஷும் சஹீர் வஹாபும், எஸ். எல். / என். குழுவில் 1300 சி. சி. போர்ட் லேசர்/ மெஷ்டா போட்டிப் பிரிவின் மிஹான் பீரிஸும் உபுல்வன் சேரசிங்கவும், எஸ். எல். /எச். குழுவின் 2000 சி. சி. சுஹாரு லெகய் போட்டிப் பிரிவில் மாலிக குருவிட ஆராச்சியும் ஹேஷான் பீரிஸும் முன்னிலை பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் போட்டிப் பிரிவில் எஸ். எம். குழுவில் சுப்பர் மோட்டார் பகிரங்க போட்டிப் பிரிவில் தேஷான் சோலங்கீயும் இமல் மஞ்சநாயக்கவும், எம். குழுவின் பகிரங்க 250 சி. சி. நவீனமயமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் போட்டிப் பிரிவில் நதுன் விஜேசிங்கவும் பிரமுக சேசன், 15 வயதின் கீழ் ஜே. குழுவில் எம். எக்ஸ். 79-85 சீ. சீ. (2 டி) 100/150 சி. சி. மோட்டார் சைக்கிள் போட்டிப் பிரிவில் கேஷர கோடகேயும் கங்கன பெர்னாந்து முன்னணி பெற்றுள்ளனர்.

இம்முறை இலங்கை ஹட்ச் சுப்பர் சீரிஸ் போட்டித் தொடரின் பிரதான அனுசரணையாளரான ஹட்ச் டெலிகொமினிகேஷன் தனியார் நிறுவனம் போட்டித் தொடரை நடத்தியதோடு, ஸ்டோபர்ட் மோட்டர் கார் நிறுவனம், பிரமோவோச் விற்பனை விளரம்பர நிறுவனம், மொபில் லுப்லிகன் நிறுவனமும் இணை அனுசரணையாளர்களாக செயலாற்றினர்.


Add new comment

Or log in with...