அரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டி; பஹ்ரைன் முதற் தடவையாக மகுடம் சூடியது | தினகரன்


அரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டி; பஹ்ரைன் முதற் தடவையாக மகுடம் சூடியது

அரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பஹ்ரைன் அணி சவூதி அரேபிய அணியை 1-– 0 என வெற்றியீட்டி முதற் தடவையாக அரேபியன் கல்ப் கிண்ணத்தை சுவீகரித்தது.

கட்டாரில் நேற்று இந்த உதைபந்தாட்ட போட்டி இடம்பெற்றது.

பஹ்ரைன் அணி கடந்த 2004 ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி தோல்வியடைந்தது.அதுவும் சவூதி அரேபிய அணியுடனான அந்த ஆட்டத்தில் 2-0 என வெற்றியீட்டியதற்கு பதிலடியாகவே இந்த வெற்றியை பஹ்ரைன் பெற்றது.

இந்த இறுதிப் போட்டி 40 ஆயிரம் இருக்கைகள் கொண்ட கலிபா சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் 12 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அப்துல்லா பின் கலிபா மைதானத்தில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

சவூதி ,பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இறுதி நேரத்தில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்தமை விசேட அம்சமாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக கட்டாருடனான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த போட்டிகளில் சவூதி ,பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் பங்கேற்றமை விசேட அம்சமாகும்.

பஹ்ரைன் அணி 4 தடவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகி தோல்வியடைந்திருந்தமை தெரிந்தே.தனது கன்னி அரேபியன் கல்ப் கிண்ணத்தை கைப்பற்றியது விசேட அம்சமாகும்.

PDF File: 

Add new comment

Or log in with...