சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது | தினகரன்


சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

பொகவந்தலாவை, சீனாகலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல்  அகழ்வில் ஈடுபட்டு வந்த ஜவரை கைது செய்துள்ளதாக  பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த  இரகசிய தகவலுக்கு அமைய நேற்று (09) இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இச்சந்தேகநபர்கள் கைது செய்யபட்டதாகவும் மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட 05சந்தேக நபர்களும் பொகவந்தலாவை, சீனாகலை மற்றும் இராணிகாடு தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, 30வயது தொடக்கம் 50வயது வரையானவர்கள் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் - எம். கிருஸ்ணா)

 

 


Add new comment

Or log in with...