திருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு | தினகரன்


திருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1,733 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்   தெரிவித்துள்ளது. 

இந்த வாரத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்   தெரிவித்துள்ளது. 

டெங்கு நோய் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...